சினிமா செய்திகள்

சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது + "||" + Opposition to Samantha is growing

சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சமந்தா. அந்த படத்தில் அவர், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த இவர் ஆரம்பத்தில் பிற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சமந்தா. அந்த படத்தில் அவர், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த இவர் ஆரம்பத்தில் பிற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால், வீட்டை ஐதராபாத்துக்கு மாற்றிக்கொண்டார். அப்போதுதான் இவருக்கும், நாக சைதன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர், ஒரு வெப் தொடரில் நடித்தார். அதில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் பெண் விடுதலைப்புலியாக நடித்து இருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்யும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவராக அவருடைய கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.


இது விடுதலைப்புலி இயக்கத்தை குறிப்பது போல் இருக்கிறது என்று தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். இதனால் சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் உலக தமிழர்களின் கோபத்தை சம்பாதித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. காவலில் எடுத்து விசாரிக்கவேண்டி இருப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தீர்ப்பு ஒத்திவைப்பு
நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி இருப்பதாக கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
2. ஓம் முத்திரை கம்மல் அணிவதா? பிரபல கவர்ச்சி நடிகைக்கு எதிர்ப்பு
ஓம் முத்திரை கம்மல் அணிவதா? பிரபல கவர்ச்சி நடிகைக்கு எதிர்ப்பு.
3. ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு
ஜப்பானில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அந்நாட்டில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
4. தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சீமான் எதிர்ப்பு
தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சீமான் எதிர்ப்பு.
5. தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு; முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
தேர்தல் ஆணையத்தின் 24 மணிநேர பிரசார தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.