சினிமா செய்திகள்

1,500 படங்களில் நடித்து சாதனை புரிந்த மனோரமா + "||" + Manorama has acted in over 1,500 films

1,500 படங்களில் நடித்து சாதனை புரிந்த மனோரமா

1,500 படங்களில் நடித்து சாதனை புரிந்த மனோரமா
தென்னிந்திய மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்தவர், மனோரமா. திரையுலகினரால் ‘‘ஆச்சி’’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார்.
தென்னிந்திய மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை புரிந்தவர், மனோரமா. திரையுலகினரால் ‘‘ஆச்சி’’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார். இந்திய திரையுலகில் சாதனை புரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். மனோரமா, மன்னார்குடியில் பிறந்தார். அவருடைய சொந்த பெயர், கோபி சாந்தா. அவர் சிறுமியாக இருந்தபோது குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தது. குடும்ப சூழல் காரணமாக 12 வயதில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அப்போது அவருடைய பெயர், மனோரமா என்று மாற்றப்பட்டது.


எந்தவித குடும்ப பின்னணியும் இல்லாத மனோரமாவை கவிஞர் கண்ணதாசன் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். 1958-ம் ஆண்டில் வெளியான ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் மனோரமா அறிமுகமானார். ‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகி ஆனார்.

அதைத்தொடர்ந்து அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. குறிப்பாக, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் அவர் ஏற்று நடித்த ‘ஜில் ஜில் ரமாமணி’ கதாபாத்திரம் சிவாஜிகணேசன்-பத்மினி கதாபாத்திரங்களுக்கு இணையாக பேசப்பட்டது. இன்று வரை பேசப்படுகிறது.

பாட்டி சொல்லை தட்டாதே, சின்ன கவுண்டர், நடிகன், மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன், சிங்கம் ஆகிய படங்களில் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார். மனோரமா கடைசியாக நடித்த படம், ‘சிங்கம்-2.’ அவர் 78 வயதில் இயற்கை எய்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை: பிரதமர் மோடி புகழாரம்
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்து உள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
2. ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது பாகிஸ்தான்
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நேற்று நடந்தது.
3. ஐ.பி.எல்.லில் 6 ஆயிரம் ரன்கள்; விராட் கோலி சாதனை
விராட் கோலி ஐ.பி.எல். போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
4. அமெரிக்காவில் ஒரே நாளில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
5. காரைக்குடி பள்ளி மாணவி சாதனை
காரைக்குடி பள்ளி மாணவி சாதனை