சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் ஒரு நடிகர் பலி + "||" + Another actor kills Corona

கொரோனாவுக்கு மேலும் ஒரு நடிகர் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒரு நடிகர் பலி
கொரோனா நோய், திரையுலகை சேர்ந்த பலரை காவு வாங்கி விட்டது. அவர்களில், ‘தாடி வெங்கட்’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் நடிகர் வெங்கட்டும் ஒருவராகி விட்டார்.
கொரோனா நோய், திரையுலகை சேர்ந்த பலரை காவு வாங்கி விட்டது. அவர்களில், ‘தாடி வெங்கட்’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் நடிகர் வெங்கட்டும் ஒருவராகி விட்டார். இவரை கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா நோய் தாக்கியது. வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.


கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், நள்ளிரவு 12:45 மணிக்கு வெங்கட் மரணம் அடைந்தார். கொரோனா ‘பாசிடிவ்’ இருந்ததால், அவருடைய உடலை ஆஸ்பத்திரி நிர்வாகமே தகனம் செய்து விட்டதாக கூறப்பட்டது.

அவருக்கு வயது 60. ‘சிங்கம்-3, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கொரில்லா’ உள்பட சில திரைப்படங்களிலும், ‘பாண்டியன் ஸ்டோர்’ என்ற டி.வி. தொடரிலும் நடித்தார். சமீபகாலமாக இணையதள டி.வி.யில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.

அவருக்கு சுபா என்ற மனைவியும், சித்தார்த் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இவரது மறைவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி- புதிதாக 89 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. புதிதாக 24 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
3. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
4. 4 பேருக்கு கொரோனா உறுதி
4 பேருக்கு கொரோனா உறுதி
5. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.