சினிமா செய்திகள்

‘‘எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா’’ யுவன்சங்கர் ராஜா மனைவி சொல்கிறார் + "||" + "My favorite composer is Ilayaraja," says Yuvanshankar Raja's wife

‘‘எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா’’ யுவன்சங்கர் ராஜா மனைவி சொல்கிறார்

‘‘எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா’’ யுவன்சங்கர் ராஜா மனைவி சொல்கிறார்
‘‘எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா’’ யுவன்சங்கர் ராஜா மனைவி சொல்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர், யுவன்சங்கர் ராஜா. இவருடைய மனைவி ஸபரூன் நிஸார் முதன் முதலாக அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- உங்களின் நேசத்துக்குரியதாக இருந்து இப்போது யுவன்சங்கர் ராஜாவுடையதாக மாறிவிட்டது எது?


பதில்:- என் குடும்பம்தான். விளையாட்டுத்தனமான விவாதங்களில் கூட, என் குடும்பம் அவர் பக்கமே நிற்கிறது. எங்கள் குடும்பம் மொத்தமாக அவரது குடும்பமாக மாறிவிட்டது.

கேள்வி:- யுவனின் மனைவியாக மிக சிறந்த விஷயமாகவும், மிக மோசமான விஷயமாகவும் எதை கருதுவீர்கள்?

பதில்:- யுவனின் மனைவி என்பதால் அவருடைய இசையுலகுக்குள் முதலில் உலாவும் அனுமதி எனக்கு கிடைத்திருப்பது, சிறந்த விஷயம். யுவனின் மனைவி என்பதால் எனக்கு அபாரமான இசை அறிவு உள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. உண்மை, அதற்கு நேர் எதிரானது. இதுவே மோசமான விஷயம்.

கேள்வி:- உங்களுக்குள் சண்டை நடப்பது உண்டா? எதற்காக சண்டை போடுவீர்கள்?

பதில்:- நாங்கள் இருவருமே தமிழர்கள் என்றாலும், இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் தமிழ் வித்தியாசமானது. எந்தவிதமான தமிழை எங்கள் மகளுக்கு கற்றுக்கொடுப்பது என்பதில் இருவருக்கும் இடையே சண்டை நடக்கும்.

கேள்வி:- சமீபத்தில் நீங்கள் யுவனிடம் கற்றுக்கொண்ட உயர்ந்த விஷயம் என்ன?

பதில்:- மனதில் எந்த கசப்பான விஷயத்தையும் சுமக்கக்கூடாது என்பதுதான். நாங்கள் அறிமுகமாகி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட காலத்திலும் சரி, திருமணம் ஆன பின்பும் சரி, அவர் எப்போதும் சாந்தமாகவே இருப்பார். எந்த விஷயத்துக்கும் உணர்ச்சிகளை கொட்ட மாட்டார். கோபப்பட மாட்டார். எதையும் அமைதியாகவே எதிர்கொள்வார். அவரிடம் இருந்து நானும் அதை கற்றுக்கொண்டேன்.

கேள்வி:- உங்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யார்?

பதில்:- இளையராஜா.

இவ்வாறு ஸபரூன் நிஸார் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகன்: ரூ.26 கோடி மோசடி; சினிமா இசையமைப்பாளர் அம்ரிஸ் கைது
பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனும், பிரபல சினிமா இசையமைப்பாளருமான அம்ரிஸ் ரூ.26 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
2. 40 ஆண்டுகள் பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவை ஏன் அனுமதிக்க கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவுக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? என்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.