சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன் + "||" + Sivakarthikeyan appeals to fans to escape from Corona

கொரோனாவில் இருந்து தப்பிக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன்

கொரோனாவில் இருந்து தப்பிக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன்
கொரோனாவில் இருந்து தப்பிக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

''என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருடன் தனித்தனியாக பேச முடியாததால் இந்த ஆடியோ பதிவு. அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து மிகவும் அவசியம் என்றால்தான் நீங்கள் வெளியே போக வேண்டும். எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள். இரட்டை முககவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள். முககவசத்தை சரியாக அணிந்து கொரோனாவிலிருந்து தப்பியவர்களை பார்த்திருக்கிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் போட்டுக்கொண்டேன். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை ரொம்ப கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களையும் வெளியே போகவிடாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான வேலை இருந்தால், அதற்கு மட்டும் வெளியே சென்றுவிட்டு, உடனே வீட்டிற்கு வந்து விடுங்கள் மிகவும் பத்திரமாக இருந்தால் கொரோனா சீக்கிரமாக முடிந்துவிடும். அவர்களுடைய வேலையை பார்க்க தொடங்கிவிடலாம். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். உடம்பை கவனித்து கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும்.


இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 16 நாட்களில் 191 பேர் உயிரிழப்பு: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசி போட வேண்டும்
16 நாட்களில் 191 பேர் உயிரிழப்பு: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்க விரைவில் தடுப்பூசி போட வேண்டும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் வேண்டுகோள்.
2. முக கவசம் அணிவதில் சென்னை மக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்
முக கவசம் அணிவதில் மற்றவர்களுக்கு சென்னை மக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. ஒமைக்ரான் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை: கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்
ஒமைக்ரான் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
4. ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் குளிக்க வைக்க சிம்பு அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5. ‘ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக தொடர ஒத்துழைக்க வேண்டும்’ முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்
ஜெயலலிதாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.