சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவின் 10-வது படம் + "||" + Venkat Prabhu's 10th film

வெங்கட் பிரபுவின் 10-வது படம்

வெங்கட் பிரபுவின் 10-வது படம்
பின்னணி பாடகராகவும் நடிகராகவும் சினிமா வாழ்க்கையை தொடங்கிய வெங்கட்பிரபு சென்னை 28 படம் மூலம் டைரக்டரானார்.
பின்னணி பாடகராகவும் நடிகராகவும் சினிமா வாழ்க்கையை தொடங்கிய வெங்கட்பிரபு சென்னை 28 படம் மூலம் டைரக்டரானார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றதால் தொடர்ந்து சரோஜா, கோவா, அஜித்குமார் நடித்த மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஜெய், ஷாம், சிவா உள்ளிட்டோர் நடித்த பார்ட்டி மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும் 10-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தை முருகானந்தம் தயாரிக்கிறார். இந்த படம் மற்றும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகப்பட விழாவில் நயன்தாரா படம்
உலகப்பட விழாவில் நயன்தாரா படம்.
2. உறுதியான விஜய்யின் 66-வது படம்
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 65-வது படம்.
3. தனுசின் புதுப்பேட்டை படம் 2-ம் பாகம்?
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006-ல் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கொக்கி குமார் கதாபாத்திரத்தில் வந்த தனுசுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
4. விஜய்யின் 66-வது படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது.
5. அஜித் குமாரின் 61-வது படம்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.