சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வரும் மேலும் 3 படங்கள் + "||" + 3 more pictures coming in ODT

ஓ.டி.டி.யில் வரும் மேலும் 3 படங்கள்

ஓ.டி.டி.யில் வரும் மேலும் 3 படங்கள்
கொரோனாவால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்து தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த நூற்றுக்கணக்கான படங்கள் முடங்கி உள்ளன.
கொரோனாவால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்து தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த நூற்றுக்கணக்கான படங்கள் முடங்கி உள்ளன. இதனால் புதிய படங்களை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். தமிழில் சூரரை போற்று, பூமி, மூக்குத்தி அம்மன், பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல படங்கள் ஏற்கனவே ஒ.டி.டி.யில் வந்துள்ளன. தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் (ஜூன்) ஓ.டி.டியில் வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய மேலும் 3 படங்களை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்து இருப்பதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நரகாசுரன் படம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடிக்க தயாராகி உள்ளது. இந்த படம் பண பிரச்சினைகளால் நீண்ட காலம் முடங்கி கிடக்கிறது. வாழ் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அருவி படம் மூலம் பிரபலமான அருண் புருஷோத்தமன் இயக்கி உள்ளார். எப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால், கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ளனர்’


தொடர்புடைய செய்திகள்

1. பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
2. கமல் நடிக்கும் 5 படங்கள்
கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
3. ரிலீசுக்கு தயாரான விஜய்சேதுபதி படங்கள்
விஜய்சேதுபதி கைவசம் 11 படங்கள் உள்ளன.
4. இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்
இன்று தியேட்டர்கள் திறப்பு திரைக்கு வரும் 40 புதிய படங்கள்.
5. விக்ரமின் 3 படங்கள்
நடிகர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடப்படாத 60-வது படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.