சினிமா செய்திகள்

உறுதியான விஜய்யின் 66-வது படம் + "||" + The 66th film of the determined Vijay

உறுதியான விஜய்யின் 66-வது படம்

உறுதியான விஜய்யின் 66-வது படம்
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 65-வது படம்.
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 65-வது படம். ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. இந்த படத்தை பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். கொரோனா படப்பிடிப்பை முடக்கி உள்ளதால் ரிலீசை தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைக்க ஆலோசிக்கிறார்கள். இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் யூகமான தகவல் பரவி வந்தது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம், பிரபாஸ் நடித்த முன்னா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். விஜய் படத்தை இயக்குவதை வம்சி தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, ‘’நான் விஜய் படத்தை இயக்க இருப்பது உண்மைதான். இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். படத்தை தில்ராஜூ தயாரிக்கிறார். நான் இதுவரை எடுத்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் விஜய் படம் தயாராகிறது’’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகப்பட விழாவில் நயன்தாரா படம்
உலகப்பட விழாவில் நயன்தாரா படம்.
2. வெங்கட் பிரபுவின் 10-வது படம்
பின்னணி பாடகராகவும் நடிகராகவும் சினிமா வாழ்க்கையை தொடங்கிய வெங்கட்பிரபு சென்னை 28 படம் மூலம் டைரக்டரானார்.
3. தனுசின் புதுப்பேட்டை படம் 2-ம் பாகம்?
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006-ல் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கொக்கி குமார் கதாபாத்திரத்தில் வந்த தனுசுக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
4. விஜய்யின் 66-வது படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது.
5. அஜித் குமாரின் 61-வது படம்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 60-வது படமான வலிமை படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.