சினிமா செய்திகள்

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் வெளியீடு; கதை என்ன...? + "||" + Jagame Thandhiram Trailer Netflix India

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் வெளியீடு; கதை என்ன...?

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் டிரைலர் வெளியீடு; கதை என்ன...?
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சென்னை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தகேங்க்ஸ்டர் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், லால் ஜோஸ்,  ஆகியோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

டிரைலர் பக்கத்தில் படத்தின் கதைக்களத்தையும் வெளியிட்டுள்ளது.

அதில்  கூறப்பட்டு இருப்பதாவது:

மதுரையைச் சேர்ந்த ரவுடி சுருளி. லண்டன் நிழலுலகில் ஆயுதக் கடத்தல், தங்க வியாபாரம் ஆகியவற்றில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் சிவதாஸ்  கூட்டத்தில் ஊடுருவ, அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, லண்டனில் அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்திருக்கும் பெரிய தாதா பீட்டர் என்பவனால் சுருளி வேலைக்கு எடுக்கப்படுகிறான். 

மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில், அவர்கள் வீடு என்று நினைக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே இந்தப் படம் இவ்வாறு அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை வைப்பு
மூணாறில் பிரபல நடிகர் ஒருவரின் மகன் ஓட்டலில் சிறை வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. இசை சரியில்லை என இசையமைப்பாளரை அவமதித்த பிரபல ஹீரோ
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்தவர். தமன் பின்னர் அவர் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக மாறினார்.
3. இன்று பிறந்த நாள்: நயன்தாரா அழகின் பரிணாம வளர்ச்சி
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
4. அடுத்த சர்ச்சையில் கங்கனா ரனாவத்; சுதந்திரத்தைத் தொடர்ந்து காந்தி குறித்து சர்ச்சை கருத்து
இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை கங்கனா ரனாவத்
5. ரஜினியின் 'அண்ணாத்த' 13 நாளில் ரூ.225 கோடி வசூலை தாண்டி சாதனை
ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது.