போலி கணக்குகள் ரசிகர்களை எச்சரித்த துல்கர் சல்மான்


போலி கணக்குகள் ரசிகர்களை எச்சரித்த துல்கர் சல்மான்
x
தினத்தந்தி 2 Jun 2021 1:13 AM GMT (Updated: 2021-06-02T06:43:13+05:30)

போலி கணக்குகள் ரசிகர்களை எச்சரித்த துல்கர் சல்மான்.

நடிகர்-நடிகைகள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கணக்குகள் வைத்து அரசியல் சமூக கருத்துக்களையும் தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான விவரங்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இன்னொருபுறம் மர்ம நபர்கள் நடிகர் நடிகைகள் பெயரில் போலி கணக்குகள் தொடங்குவதும் அதை உண்மை என்று நம்பி ரசிகர்கள் பின் தொடர்வதும் நடக்கிறது. இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது பெயரில் போலி கணக்குகள் உள்ளதாக ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். போலி கணக்குகள் விவரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பலப்படுத்தி துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த கணக்குகள் என்னுைடயவை அல்ல. தயவு செய்து எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம், அது நல்லது இல்லை'' என்று கூறியுள்ளார்.

Next Story