மீண்டும் வில்லனாக அர்ஜுன்


மீண்டும் வில்லனாக அர்ஜுன்
x
தினத்தந்தி 2 Jun 2021 1:20 AM GMT (Updated: 2021-06-02T06:50:11+05:30)

கதாநாயகர்கள் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கதாநாயகர்கள் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக வந்தார். முன்னாள் கதாநாயகர்கள் கார்த்திக், அர்ஜுன் ஆகியோரும் வில்லன்களாக நடித்து வருகிறார்கள்.

மணிரத்னம் இயக்கிய கடல், விஷாலின் இரும்புத்திரை ஆகிய படங்களில் அர்ஜுன் வில்லனாக மிரட்டினார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க அர்ஜுனிடம் பேசி வருகிறார்கள். மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரி பாட்டா படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனாவால் முடங்கி உள்ளது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க பொருத்தமான நடிகரை தேடி வந்தனர். தற்போது அர்ஜுனை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜுனுக்கு கதை பிடித்துள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Next Story