சினிமா செய்திகள்

எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் படம்: நடிகர் தனுஷ் வருத்தம் + "||" + Image in ODT despite opposition: Actor Dhanush upset

எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் படம்: நடிகர் தனுஷ் வருத்தம்

எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் படம்: நடிகர் தனுஷ் வருத்தம்
தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் இந்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தனுஷ் விரும்பவில்லை.
தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் இந்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தனுஷ் விரும்பவில்லை. திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜெகமே தந்திரம் தியேட்டரில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.


தனுஷ் ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி ஜெகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி. தளத்துக்கு விற்று விட்டனர். இது தனுசுக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெகமே தந்திரம் படம் சம்பந்தமான எந்த பதிவுகளையும் சமூக வலைத்தள பக்கத்தில் தனுஷ் வெளியிடாமல் இருந்தார்.

தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தியேட்டரில் வெளியாகி சிறந்த அனுபவத்தை கொடுக்க வேண்டிய படம் ஓ.டி.டி.யில் வருகிறது. ஆனாலும் அனைவரும் ஜெகமே தந்திரம் மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறியுள்ளார். தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது.
2. தனுஷின் பாலிவுட் திரைப்படம்: வெளியானது டிரைலர்...!
படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
3. 'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது
தனுஷ் நடிக்கும்'மாறன்'திரைப்படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
4. ‘நீர் வீணாவது வருத்தமளிக்கிறது’: பாலாற்றில் தடுப்பணை கட்ட ராமதாஸ் வலியுறுத்தல்
பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5. தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?
மாறன் திரைப்படத்தின் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை