சினிமா செய்திகள்

சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா + "||" + Sexual harassment of me in cinema -Actress Sona

சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா

சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா
சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா.
கவர்ச்சி, நகைச்சுவை, குணசித்திர நடிகையாக வலம் வந்த சோனா தற்போது தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க தொடங்கி உள்ளார். இதுகுறித்து சோனா அளித்துள்ள பேட்டியில் “சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் “அபி டெய்லர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறேன்.


ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்ததால் இப்போதும் அதுமாதிரி நடிக்கவே வாய்ப்புகள் வருகின்றன. வில்லி, நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. தமிழில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடிக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். பாலியல் தொல்லைகள் எல்லா துறையிலும் இருக்கிறது. இப்போது பள்ளியில் இருந்தும் இதுபோல் குற்றசாட்டுகள் வருகின்றன.

பாலியல் குற்றங்கள் எங்கு நடந்தாலும் முறையான விசாரணையும், தண்டனையும் அவசியம். திரைத்துறையை பொறுத்தவரை, தனித்து குற்றம் சொல்ல முடியாது. சில வருடங்களுக்கு முன் எனக்கும் இதுபோல் பாலியல் தொல்லை நடந்தது. நமக்கான உரிமைக்கு நாம்தான் போராட வேண்டும். உங்களுக்கு நடந்தால் அதை வெளிப்படுத்துங்கள். உரிமைக்கு குரல் கொடுங்கள். எதுவும் நடக்கவில்லையெனில் அதை கடந்து செல்லுங்கள். வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கடந்து வந்துவிட்டேன். அது தான் நல்லது'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமாவில் ஆணாதிக்கம் -நடிகை ராஷிகன்னா
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
2. பணம் திருடியதாக நடிகை மீது புகார்
பணம் திருடியதாக நடிகை மீது புகார்.
3. ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்-நடிகை மீது வழக்கு
கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
4. விக்ரம் பட நடிகை 2-வது திருமணம்?
தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரேமா, பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
5. கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்
கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்.