சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் வரும் நயன்தாரா படங்கள் + "||" + Nayanthara pictures coming on ODT

ஓ.டி.டி.யில் வரும் நயன்தாரா படங்கள்

ஓ.டி.டி.யில் வரும் நயன்தாரா படங்கள்
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே சூரரை போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின், க.பெ.ரணசிங்கம், லாக்கப், டேனி, பரமபதம் விளையாட்டு உள்ளிட் ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய படங்களையும் ஓ.டி.டிக்கு கொடுக்க முயற்சி நடக்கிறது.


இந்த நிலையில் நயன்தாராவின் 3 படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் ஏற்கனவே ஓ.டி.டியில் வந்தது. தற்போது அவரது நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய படங்களை வாங்கி வெளியிட ஓ.டி.டி. தளங்கள் அணுகி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவே நடித்து இருக்கிறார். ராக்கி படத்தின் விநியோக உரிமையை விலைக்கு வாங்கி இருக்கிறார். கூழாங்கல் படத்தை விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ளார். ராக்கி படத்தில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ளார். அருள் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். கூழாங்கல் படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
2. நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக்..!
யூடியூப் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரித்விக் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
3. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
4. பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
5. நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன்
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், வாங்கி திரையிட்டும் வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை