சினிமா செய்திகள்

தெலுங்குக்கு போகும் தமிழ் இயக்குனர்கள் + "||" + Tamil directors going to Telugu

தெலுங்குக்கு போகும் தமிழ் இயக்குனர்கள்

தெலுங்குக்கு போகும் தமிழ் இயக்குனர்கள்
தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் இயக்குனர்கள் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.
தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் இயக்குனர்கள் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.


இயக்குனர் ஷங்கர் முன்னணி தெலுங்கு கதாநாயகனான ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-ம் பாகத்தை முடிக்காமல் தெலுங்கு படத்தை அவர் இயக்க கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார்.

லிங்குசாமி தெலுங்கு படமொன்றை இயக்கி வருகிறார். இதில் ராம்போதினேனி கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாசும் தெலுங்கு படம் இயக்க தயாராகிறார். ஏற்கனவே விஜய்யின் 65-வது படத்தை முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. சம்பள பிரச்சினையில் அவர் விலகியதால் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். முருகதாஸ் இயக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயாகனாக ராம் போதினேனி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. முருகதாஸ் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். மேலும் சில இயக்குனர்களும் தெலுங்கு படங்கள் இயக்க பேச்சுவார்த்தையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் படத்தில், ராணா
தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், ராணா டகுபதி. ‘பாகுபலி’ படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிக்கும் ஒரு புதிய படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
2. நீண்டகால கனவு நிறைவேறியது மும்பை நடிகையின் ஆசையை நிறைவேற்றிய தமிழ் டைரக்டர்
நீண்டகால கனவு நிறைவேறியது மும்பை நடிகையின் ஆசையை நிறைவேற்றிய தமிழ் டைரக்டர்.
3. சுதந்திரத்தைப் போற்றிய தமிழ் திரைப்படங்கள்
சுதந்திரப் போராட்டத்தை, அது உச்சத்தில் இருந்த காலங்களில் மக்களின் மனதில் பதியம் போட்டதில், திரைப்படங்களின் பங்கு அளப்பரியது.
4. காந்தியடிகளின் தமிழ் பற்று
மகாத்மாவாக அறியப்படாத காலத்தில் இருந்தே தமிழ் மக் களுடனும் தமிழ்நாட்டோடும் தொடர்பில் இருந்தார் காந்தியடிகள்.
5. தமிழ், தெலுங்கு, இந்தியில் ஷங்கர் இயக்கும் 3 புதிய படங்கள்
‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.