சினிமா செய்திகள்

கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் நடிகர் மீது மனைவி புகார் + "||" + Wife complains about actor having illicit relationship

கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் நடிகர் மீது மனைவி புகார்

கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் நடிகர் மீது மனைவி புகார்
இந்தி நடிகை நிஷா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை போலீசில் புகார் அளித்தார்.
இந்தி நடிகை நிஷா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை போலீசில் புகார் அளித்தார். கணவர் தன்னை அடித்து சுவரில் தள்ளியதாகவும், இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறி இருந்தார். இதையடுத்து கரண் மேஹ்ரா கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.


இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நிஷா ராவல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, “நானும், கரண் மேஹ்ராவும் 14 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம். எங்களுக்குள் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் நடந்துள்ளன. கரண் மேஹ்ராவுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அதுபற்றி முதலில் எனக்கு தெரியவில்லை.

எனக்கு தெரியவந்ததும் கரணிடம் கேட்டேன். அதற்கு ஆமாம் என்றார். அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவளோடு உறவு வைத்திருப்பதாகவும் கூறினார். இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தேன். கரண் கள்ளத்தொடர்பை விட்டு விட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டால் சேர்ந்து வாழ தயாராக இருக்கிறேன்'' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
இணைய தளங்களில் தன்னை பற்றிய ஆபாசபடங்களை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
2. வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்
தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா.
3. வலைத்தளத்தில் அவதூறு பிரபல நடிகை போலீசில் புகார்
பிரபல இந்தி நடிகை சுவரா பாஸ்கர். இவர் தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்து பிரபலமானார்.
4. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
5. அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார்
சென்னை அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.