சினிமா செய்திகள்

கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம் + "||" + Criticizing wearing sexy clothes? Actress Raisa condemned

கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்

கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்
கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ரைசா வில்சன், பியார் பிரேம காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலை இல்லா பட்டதாரி 2, தனுஷ் ராசி நேயர்களே ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது த சேஸ், காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரைசா வில்சன் அரைகுறை உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


ரைசாவை கேலி செய்தும், விமர்சித்தும் பலர் கருத்துகள் பதிவிட்டனர். சிலர் ஆதரவாகவும் பேசினர். இந்த நிலையில் விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து ரைசா வில்சன் கூறும்போது, “நடிகை நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் சாதாரண விஷயம். பெரிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எனக்கு பிடித்த உடையை நான் அணிகிறேன். இதனால் கெட்ட பெயர் வந்துவிடுமா? நான் அப்படி நினைக்கவில்லை. எனது பதிவுகள் பிடிக்காதவர்கள் என்னை பின் தொடர வேண்டாம். போலி கணக்கு வைத்திருப்பவர்கள்தான் இதுபோல் மோசமான பதிவுகள் வெளியிட்டு வெறுப்பை உமிழ்கிறார்கள். அவர்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். வெறுப்பு காட்டுபவர்கள் எதிர்மறையாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் எதிர்மறையாக பார்த்தால் உங்களுக்கு மகிழ்ச்சியே இருக்காது'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது சசிகலா கண்டனம்.
2. நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம்: தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்.
3. கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை ஒடுக்குவதா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்
கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை ஒடுக்குவதா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்.
4. ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் அ.தி.மு.க.வை குறைகூறுவதா? மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
‘ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் அ.தி.மு.க.வை குறைகூறுவது தவறு. இதனை மக்கள் ஏற்கமாட்டர்கள்’, என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. ‘அம்மா வளாகம்' என்ற பெயரை மாற்றம் செய்வதா? ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கண்டனம்
‘அம்மா வளாகம்' என்ற பெயரை மாற்றுவதா? என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.