பொற்கோவிலில் கங்கனா ரணாவத்


பொற்கோவிலில் கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 3 Jun 2021 1:22 AM GMT (Updated: 2021-06-03T06:52:50+05:30)

நடிகை கங்கனா ரணாவத் சமூக, அரசியல் கருத்துகளை துணிச்சலாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

நடிகை கங்கனா ரணாவத் சமூக, அரசியல் கருத்துகளை துணிச்சலாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். பா.ஜனதாவை விமர்சிப்பவர்களை கடுமையாக சாடி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான கருத்துகளையும் வெளியிடுகிறார். இதனால் அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சர்ச்சை பதிவுகள் காரணமாக சமீபத்தில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்த நிலையில் கங்கனா ரணாவத் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி கும்பிட்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

மூத்த பா.ஜனதா தலைவர் ஒருவர் கூறும்போது, “கங்கனா ரணாவத் இமாசலப்பிரதேச அரசியலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது” என்றார். இமாசலப்பிரதேசம் மண்டி தொகுதி பா.ஜனதா எம்.பி சுவரூப் சர்மா கடந்த மார்ச் மாதம் இறந்து போனார். மண்டி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கங்கனா ரணாவத்தை வேட்பாளராக நிறுத்த பா.ஜனதா கட்சி விரும்புவதாகவும், கங்கனாவும் அதை ஏற்றுக்கொள்வார் என்றும் தகவல் பரவி வருகிறது. தேர்தலை மனதில் வைத்து சீக்கியர்கள் ஆதரவை பெறுவதற்காகவே பொற்கோவிலுக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.

Next Story