சினிமா செய்திகள்

கமல்ஹாசன் படங்களை இயக்கிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார் + "||" + Directed by Kamal Haasan Films Director GN Rangarajan has passed away

கமல்ஹாசன் படங்களை இயக்கிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

கமல்ஹாசன் படங்களை இயக்கிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்
கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகாராசன் படங்களை இயக்கிய ஜி.என் ரங்கராஜன் காலமானார்.
சென்னை

தமிழில் கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். பழம்பெரும் திரைப்பட டைரக்டரான  இவருக்கு வயது 90. சென்னையில் இன்று காலை இவர்  காலமானார் 

ஜி.என்.ரங்கராஜன் ஜி.என்.ஆர் குமரவேலனும் திரைப்பட டைரகடர். இவர் வாஹா, யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தனது தந்தை மறைவுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ’’எனது தந்தை, எனது வழிகாட்டி, எனது அன்புக்குரியவர்... இன்று காலை 8.45க்கு காலமானார். எங்கள் குடும்பத்திற்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் தேவை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
2. "பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் மது விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
4. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
5. இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்