சினிமா செய்திகள்

மணிரத்னம் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகை சுஹாசினி + "||" + Actress Suhasini warns fans of fake Twitter account in Mani Ratnam's name

மணிரத்னம் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகை சுஹாசினி

மணிரத்னம் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகை சுஹாசினி
மணிரத்னம் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு ரசிகர்களை எச்சரித்த நடிகை சுஹாசினி.
நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் கணக்குகள் வைத்து கருத்துக்கள் பதிவிடுவதுடன் தங்களுடைய புதிய படங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் பெயரில் மர்ம நபர்கள் போலிகணக்குகளை தொடங்குவதும் அவற்றை உண்மை என்று நம்பி ரசிகர்கள் பின் தொடர்வதும் நடக்கிறது.


இந்த நிலையில் தமிழில் இதயகோவில், மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓ காதல் கண்மனி உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இயக்கிய முன்னணி டைரக்டர் மணிரத்னம் பெயரிலும் டுவிட்டரில் போலி கணக்கை உருவாக்கி உள்ளனர்.

அவரது பிறந்தநாளில் டுவிட்டர் பக்கத்தில் இணைவதாக மணிரத்னம் புகைப்படத்துடன் இந்த போலி கணக்கை தொடங்கி உள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் உண்மை என்று நம்பி பின்தொடர ஆரம்பித்து உள்ளனர்.

இது போலி கணக்கு என்பதை மணிரத்னம் மனைவியும் நடிகையுமான சுஹாசினி அம்பலப்படுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்குனர் மணிரத்னம் டுவிட்டர் பக்கம் தொடங்கி இருப்பதாக ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார். இது பொய். அந்த போலி நபர் கணக்கில் எச்சரிக்கையாக இருங்கள்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது கடிகார கடையில் ரூ.22 ஆயிரம் மோசடி
சென்னை அடையாறில் கடிகார கடையில் ரூ.22 ஆயிரம் மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
3. "இளமை இதோ இதோ..." - இணையத்தில் டிரெண்டாகும் இளையராஜாவின் வீடியோ
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக போலியாக நேர்முகத்தேர்வு நடத்திய 8 பேர் கைது
மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக போலியாக நேர்முகத்தேர்வு நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. ‘மைக்ரோசாப்ட்’ பெயரில் போலி மென்பொருள் விற்ற 13 பேர் சிக்கினர்
குறைந்த விலையில் தருவதாக கால்சென்டர்கள் மூலம் வலைவிரித்து, ‘மைக்ரோசாப்ட்’ என்ற பெயரில் போலி மென்பொருளை விற்ற 13 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.