ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்-நடிகை மீது வழக்கு


ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்-நடிகை மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Jun 2021 1:27 AM GMT (Updated: 2021-06-04T06:57:02+05:30)

கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை திஷா பதானி, தனது காதலரும் இந்தி நடிகருமான டைகர் ஷெராப்புடன் மும்பையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே காரில் சுற்றியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “மராட்டிய அரசு காலை 7 மணிமுதல் பகல் 2 மணிவரை அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் பகல் 2 மணிக்கு பிறகு திஷா பதானியும், டைகர் ஷெராப்பும் காரில் வெளியே சுற்றினர். அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் திருப்தியான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து இருவர் மீதும் 188, 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது’’ என்றனர்.

திஷா பதானி இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்து இருந்தார்.

Next Story