சினிமா செய்திகள்

‘மாமனிதன்’ படத்துக்காக இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த பாடல் + "||" + Ilaiyaraja, Along with Yuvanshankar Raja Composed song

‘மாமனிதன்’ படத்துக்காக இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த பாடல்

‘மாமனிதன்’ படத்துக்காக இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த பாடல்
இசையமைப்பாளர் இளையராஜாவும், அவருடைய மகன் யுவன்சங்கர் ராஜாவும் ‘மாமனிதன்’ படத்துக்காக ஒரு பாடலுக்கு இணைந்து இசையமைத்து இருக்கிறார்கள்.
‘‘ஏ ராசா...’’என்று தொடங்கும் அந்த பாடல், வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், இந்த பொதுமுடக்க காலத்தில் மனதுக்கு இனிமையை தருவதாகவும் அமைந்துள்ளது.

பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா பாடியிருக்கிறார். விஜய் சேதுபதி, காயத்ரி கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, சீனுராமசாமி டைரக்டு செய்து இருக்கிறார். யுவன்சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

‘‘ஏ ராசா பாடல் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும். ஆத்மாவை சாந்தப் படுத்தும். பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும்’’ என்கிறார், யுவன்சங்கர் ராஜா.

தொடர்புடைய செய்திகள்

1. இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இசையமைத்து இருக்கும் இளையராஜாவின் 1417வது படத்தின் புதிய அப்டேட்.
2. இன்று இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள் - தமிழ் திரையுலகில் மாயாஜாலம் நிகழ்த்திய கூட்டணி
தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் இளையராஜா, மணிரத்னம் இருவரும் இன்று பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.