‘பிசாசு-1’க்கும், ‘பிசாசு-2’க்கும் தொடர்பு உண்டா? மிஷ்கின் விளக்கம்


‘பிசாசு-1’க்கும், ‘பிசாசு-2’க்கும் தொடர்பு உண்டா? மிஷ்கின் விளக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2021 3:15 PM GMT (Updated: 2021-06-04T20:45:34+05:30)

‘‘பிசாசு-1’க்கும், ‘பிசாசு-2’க்கும் தொடர்பு இருக்கு. ஆனால் இல்லை. இப்படித்தான் சொல்ல முடியும்.

தமிழ் திரையுலகின் முக்கிய டைரக்டர்களில் ஒருவர், மிஷ்கின். ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து ‘அஞ்சாதே, ’ ‘யுத்தம் செய், ’ ‘பிசாசு’ உள்பட பல படங்களை இயக்கினார். அவர் இப்போது, ‘பிசாசு-2’ என்ற புதிய படத்தை இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

‘‘பிசாசு-1’க்கும், ‘பிசாசு-2’க்கும் தொடர்பு இருக்கு. ஆனால் இல்லை. இப்படித்தான் சொல்ல முடியும். ஏனென்றால் இதுவும் ஒரு பிசாசு பற்றிய கதை. ஆனால் இது பிசாசு ஒன்றில் இருந்து எந்தவிதத்திலும் தொடர்புபடுத்தப்படவில்லை. இது முற்றிலும் வேறுபட்ட கதை. பிசாசு-1 போல் இந்த படத்திலும் அன்பு, பாசம் இருக்கும். இதுவும் ஒரு நல்ல கதையாக அமைந்துள்ளது.

ஆண்ட்ரியாதான் படத்தின் கதா நாயகி. அவருடைய கதாபாத்திரம் மிக முக்கியமானது. அவரது திரைப்பயணத்தில் ஒரு சிறந்த படமாக இருக்கும். அதற்காக அவர் ஒவ்வொரு காட்சியிலும் கடுமையாக உழைத்து இருக்கிறார்.

இது, முழுக்க முழுக்க திகில் படம்தான். பயத்தை ஏற்படுத்தும் படம்தான். பலவிதமான உணர்வுகளை உள்ளடக்கிய திகில் படம்.

இதில், கதாநாயகன் இல்லை. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்துள்ளார். வியக்கத்தக்க வகையில், விஜய் சேதுபதி நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப்பும் இருக்கிறார். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. 10 நாள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது.’’

Next Story