சினிமா செய்திகள்

படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தம் 'மிஷன் இம்பாசிபிள்' படக்குழுவினருக்கு கொரோனா + "||" + Filming resumes Corona for 'Mission Impossible' crew

படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தம் 'மிஷன் இம்பாசிபிள்' படக்குழுவினருக்கு கொரோனா

படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தம் 'மிஷன் இம்பாசிபிள்' படக்குழுவினருக்கு கொரோனா
படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தம் 'மிஷன் இம்பாசிபிள்' படக்குழுவினருக்கு கொரோனா.
டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வரிசையில் இதுவரை 6 பாகங்கள் வந்துள்ளன. தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் மேலும் 2 பாகங்கள் தயாராகி வருகின்றன.


கிறிஸ்டோபர் மெக்குயர் இயக்குகிறார். மிஷன் இம்பாசிபிள் 7-ம் பாகத்தை அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதியும், 8-ம் பாகத்தை அடுத்த வருடம் ஆகஸ்டு 5-ந்தேதியும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவலால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு ரிலீஸ் தேதியை பல முறை தள்ளி வைத்துள்ளனர். சமீபத்தில் லண்டனில் மிஷன் இம்பாசிபிள் 7 படப்பிடிப்பை மீண்டும் நடத்த அனுமதி கிடைத்தது. இதையடுத்து அங்கு ஒரு கிராமத்தையே அரங்குகளாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இரவு விடுதியில் நடக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இதில் டாம் குரூசுடன் நடன கலைஞர்களும், துணை நடிகர்களும் இணைந்து நடித்தனர்.

இந்த நிலையில் படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் டாம்குரூசுடன் நடித்த 4 நடன கலைஞர்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார்.
2. மேலும் 12 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கொரோனா அச்சுறுத்தல்; ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
4. கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவுக்கு மத்திய அரசின் 6 பேர் கொண்ட நிபுணர் குழு வருகை
கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கேரளாவுக்கு மத்திய அரசின் நிபுணர் குழுவைச் சேர்ந்த 6 பேர் வருகை தந்துள்ளனர்.
5. 1,859 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயருகிறது
தமிழகத்தில் 1,859 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று உயர்ந்துள்ளது.