சினிமா செய்திகள்

பட அதிபருடன் தனுஷ் மோதல் + "||" + Dhanush clashes with film magnate

பட அதிபருடன் தனுஷ் மோதல்

பட அதிபருடன் தனுஷ் மோதல்
பட அதிபருடன் தனுஷ் மோதல்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடந்தபோதே தனுஷ் டுவிட்டரில், “திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப்போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று பதிவிட்டு எதிர்த்தார்.


அவரது எதிர்ப்பையும் மீறி படம் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. இதனால் தனுசுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போதும், “தனுசும், நானும் 10 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். ஆனால் ஜெகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படம் தியேட்டரில் வந்தால் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் வணிகரீதியாக அதிக பொருட் செலவில் எடுத்த படத்தை ஒரு வருடமாக கையில் வைத்து இருப்பதால் வட்டி சுமை ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வெளியிடாமல் இருந்தால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ஓ.டி.டி.யில் வெளியிடுகிறோம்'' என்றார்.
தொடர்புடைய செய்திகள்

1. தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?
மாறன் திரைப்படத்தின் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.
2. மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்: கணவர் கண் எதிரே மனைவி பலி
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரேயே மனைவி பரிதாபமாக இறந்தார்.
3. தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
4. அனிருத் பிறந்தநாள் - திரைப் பிரபலங்கள் வாழ்த்து
இசையமைப்பாளர் அனிருத் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
5. தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா
தெலுங்கு நடிகர் சங்க மோதல் பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேர் ராஜினாமா.