சிக்கலில் கமலின் 2 படங்கள்


சிக்கலில் கமலின் 2 படங்கள்
x
தினத்தந்தி 4 Jun 2021 11:11 PM GMT (Updated: 2021-06-05T04:41:34+05:30)

கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், இந்தியிலும் படங்கள் இயக்க தயாராகி உள்ளார்.

கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், இந்தியிலும் படங்கள் இயக்க தயாராகி உள்ளார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இந்தியன் 2 வழக்கு இதற்கு தடையாக உள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து விட்டுத்தான் ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் விக்ரம் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது.

அதே நேரம் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்தியன் 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஷங்கருக்கும், இந்தியன் 2 பட தயாரிப்பாளருக்கும் இடையே கமல்ஹாசன் மேற்கொண்ட சமரச முயற்சி வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கோர்ட்டு தீர்ப்புக்காக கமல்ஹாசன் உள்பட இரு படக்குழுவினரும் காத்து இருக்கிறார்கள்.

Next Story