சினிமா செய்திகள்

சேமிப்பை எடுத்து மற்றவர்கள் பசியாற்றிய நடிகர் + "||" + Take savings The actor who made others hungry

சேமிப்பை எடுத்து மற்றவர்கள் பசியாற்றிய நடிகர்

சேமிப்பை எடுத்து மற்றவர்கள் பசியாற்றிய நடிகர்
(சென்னை அசோக்நகரில்) ஊரடங்கில் பசியால் வாடுபவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
நடிகரும், ‘காவல்’ படத்தின் டைரக்டருமான வி.ஆர்.நாகேந்திரன் அவர் வசிக்கும் பகுதியில் (சென்னை அசோக்நகரில்) ஊரடங்கில் பசியால் வாடுபவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ஊரடங்கில், பசியால் வாடுபவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு உணவு வழங்கி வந்தேன். நாளுக்கு நாள் உணவு கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. 50 பொட்டலங்களில் ஆரம்பித்து இப்போது 400 பொட்டலங்களாக உயர்ந்திருக்கிறது.

இதற்காக, என் மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து செலவு செய்து வருகிறேன். இதுபற்றி அறிந்த டைரக்டர்கள் சுசி கணேசன், லிங்குசாமி, சீனுராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் நிதி உதவி அளித்தார்கள்’’ என்றார்.