சினிமா செய்திகள்

பாபநாசம் 2-ம் பாகத்தில் கமல்? + "||" + Kamal in Papanasam Part 2?

பாபநாசம் 2-ம் பாகத்தில் கமல்?

பாபநாசம் 2-ம் பாகத்தில் கமல்?
திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2-ம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? எனறு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி லாபம் பார்த்துள்ளது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழிலும் திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2-ம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? எனறு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல்ஹாசனுடன் இதுகுறித்து பேச திரிஷ்யம் 2 படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் சம்மதித்தால் திரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்வேன் என்று படத்தின் டைரக்டர் ஜீத்து ஜோசப் ஏற்கனவே கூறியுள்ளார். கோர்ட்டு வழக்கினால் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படப்பிடிப்பிலும் கமல்ஹாசன் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பாபநாசம் 2 படத்தில் ஒரு மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்பதால் அதில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.