நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி


நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 7 Jun 2021 12:08 AM GMT (Updated: 2021-06-07T05:38:11+05:30)

நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவினால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு 98 வயது ஆகிறது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வயது முதிர்வினால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். கடந்த மாதம் திலீப்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இந்த நிலையில் திலீப்குமாருக்கு நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறலும் இருந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலீப்குமார் மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு கூறும்போது, ‘திலீப்குமாருக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. சுவாச பிரச்சினைகளும் ஏற்பட்டன. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எதனால் அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் இதர பல பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன’ என்றார்.

Next Story