கொரோனாவில் சிக்கிய கங்கனா, பூஜா ஹெக்டே பகிர்ந்த அனுபவங்கள்


கொரோனாவில் சிக்கிய கங்கனா, பூஜா ஹெக்டே பகிர்ந்த அனுபவங்கள்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:22 AM GMT (Updated: 2021-06-07T05:52:43+05:30)

கொரோனாவில் சிக்கிய கங்கனா, பூஜா ஹெக்டே இருவரும் அனுபவங்களை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத்தும் விஜய்யின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவும் கொரோனா தொற்றில் சிக்கி மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அனுபவங்களை விளக்கி இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளனர். கங்கனா ரணாவத் வீடியோவில் கூறும்போது, 

‘கொரோனாவில் சிக்கிய எனக்கு பயங்கர அனுபவங்கள் ஏற்பட்டன. பரிசோதனையில் தொற்று இல்லை என்று வந்த பிறகும் நோய் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தேன். எழுந்து நடமாட முடியவில்லை. தொண்டை வலித்தது. காய்ச்சல் வந்தது. மரபணு மாற்ற வைரஸ் என்பதால் உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தியை இழக்க வைக்கிறது. இதனால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே முழுமையாக குணமாவது முக்கியம். கொரோனாவில் இருந்து தேறும்போது அதிக ஓய்வு எடுப்பது அவசியம் என்று உணர்ந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

பூஜா ஹெக்டே வீடியோவில் கூறும்போது, ‘பெண்களுக்கு வலிமை முக்கியம். வலிமை வாய்ந்த பெண்கள் பின்வாங்க மாட்டார்கள். அழுகையும் மோசமான நாட்களும் கவலையை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் பெண்களாகிய நாங்கள் அதில் இருந்து வெளியே வந்து விடுகிறோம்’’ என்றார்.

Next Story