கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர் ரகுமான்


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர் ரகுமான்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:56 PM GMT (Updated: 2021-06-07T18:26:02+05:30)

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விளையாட்டுப் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும்  தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில்,  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகன் ஏ.ஆர். அமீனுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டேன், நீங்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்


Next Story