சினிமா செய்திகள்

வில்லனாக மாதவன் + "||" + Madhavan as the villain

வில்லனாக மாதவன்

வில்லனாக மாதவன்
லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.
கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க வருகிறார்கள். ஏற்கனவே விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். கார்த்திக், அர்ஜுன் ஆகியோரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் மாதவனுக்கும் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. மாதவன் 2000-ல் அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். கன்னத்தில் முத்தமிட்டால், ரன், தம்பி, வேட்டை, விக்ரம் வேதா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையான ராக்கெட்ரி படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தனேனி கதாநாயகனாக நடித்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை மாதவனுக்கு பிடித்துள்ளதாகவும், எனவே அவர் நடிக்க சம்மதிப்பார் என்றும் படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.