சினிமா செய்திகள்

தடுப்பூசி போட்ட ஏ.ஆர்.ரகுமான் + "||" + Vaccinated A.R. Raghuman

தடுப்பூசி போட்ட ஏ.ஆர்.ரகுமான்

தடுப்பூசி போட்ட ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தனது மகனுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அரசு வற்புறுத்தி வருகிறது. நடிகர்- நடிகைகள் பலர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். தடுப்பூசி போட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர். 

ரஜினிகாந்த் உள்பட அனைத்து நடிகர் நடிகைகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டு புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தனது மகனுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்ட பிறகு மகனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு விட்டீர்களா?” என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.