சினிமா செய்திகள்

வருமான வரி பாக்கி செலுத்தாத கங்கனா + "||" + Kangana who does not pay income tax arrears

வருமான வரி பாக்கி செலுத்தாத கங்கனா

வருமான வரி பாக்கி செலுத்தாத கங்கனா
வருமான வரி பாக்கி செலுத்தாத கங்கனா.
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரணாவத் ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு கங்கனா ரணாவத் வீட்டில் இருக்கிறார். வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த கஷ்டப்படுவதாக கங்கனா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் அதிக வருமான வரி செலுத்துகிறேன். என்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருகிறேன். ஆனால் கடந்த வருடம் எனக்கு வேலை இல்லை. இதனால் வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வருமான வரியின் பாதி தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. நான் வரி செலுத்த தாமதம் செய்ததால் வட்டி விதித்துள்ளனர். ஆனாலும் இதனை வரவேற்கிறேன். இந்த காலம் வரி செலுத்தும் தனி நபர்களுக்கு கஷ்டமான காலமாக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத்தொகை
குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத்தொகை சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
2. காலாண்டு முறையில் ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் இன்று கடைசி நாளாகும்
காலாண்டு முறையில் ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் இன்று கடைசி நாளாகும்.
3. வருமான வரித்துறைக்கு மின்னணு முறையில் படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் மத்திய நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை
வருமான வரித்துறையில் பல்வேறு படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
4. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரி தலைமை இயக்குனராக சுனில் மாத்தூர் பொறுப்பு ஏற்பு.
5. வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் அதிகாரி தகவல்
வருமான வரி படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் அதிகாரி தகவல்.