நடிகரான அமீர்கான் மகன்


நடிகரான அமீர்கான் மகன்
x
தினத்தந்தி 11 Jun 2021 12:43 AM GMT (Updated: 2021-06-11T06:13:12+05:30)

முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் வாரிசுகளையும், சினிமாவில் இறக்கி விடுகிறார்கள். இந்த வரிசையில் இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானும் நடிக்க வந்துள்ளார்.

முன்னணி நடிகர் நடிகைகள் தங்கள் வாரிசுகளையும், சினிமாவில் இறக்கி விடுகிறார்கள். இந்த வரிசையில் இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானும் நடிக்க வந்துள்ளார். மகாராஜா என்ற பெயரில் தயாராகும் இந்தி படத்தில் அவர் அறிமுகமாகிறார்.

அவர் பத்திரிகை நிருபர் வேடத்தில் வருகிறார். ஷாலினி பாண்டே, ஸலவாத் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

படத்தில் பணியாற்றும் துணை நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து படக்குழுவினர் 100 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story