சினிமா செய்திகள்

எனக்கு மீண்டும் திருமணமா? நடிகை வனிதா விளக்கம் + "||" + Should I remarry? Actress Vanitha Description

எனக்கு மீண்டும் திருமணமா? நடிகை வனிதா விளக்கம்

எனக்கு மீண்டும் திருமணமா? நடிகை வனிதா விளக்கம்
எனக்கு மீண்டும் திருமணமா? நடிகை வனிதா விளக்கம்.
நடிகை வனிதா 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் கடந்த வருடம் பீட்டர்பால் என்பவரை காதலித்து 3-வதாக மணந்தார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியும், குழந்தையும் இருப்பதால் வனிதாவை மணந்தது சர்ச்சையானது.


பீட்டர் பால் மனைவி போலீசிலும் புகார் அளித்தார். சட்டப்படி விவாகரத்து பெறாதவரை வனிதா மணந்தது தவறு என்று சில நடிகைகள் விமர்சித்தனர். இது பரபரப்பானது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கோவா சென்ற இடத்தில் பீட்டர் பாலுக்கும், வனிதாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

பீட்டர் பால் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றினேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் குடிக்கிறார். நான் ஏமாந்து போனேன் என்று அறிக்கை விட்டு அவரை விட்டு வனிதா பிரிந்தார்.

இந்த நிலையில் வனிதா வட இந்தியாவை சேர்ந்த விமான பைலட் ஒருவரை காதலித்து கொல்கத்தாவில் உள்ள கோவிலில் 4-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு வனிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அப்படியேதான் இருந்து வருகிறேன். எனவே எந்த வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவாகரத்து வதந்திக்கு சமந்தா விளக்கம்
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
2. விமர்சனத்துக்கு கனகா விளக்கம்
விமர்சனத்துக்கு கனகா விளக்கம்.
3. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
4. தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து? அமைச்சர் விளக்கம்
நிபா வைரசால் தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவது பற்றி அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார்.
5. தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்
தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்.