சினிமா செய்திகள்

உலகப்பட விழாவில் நயன்தாரா படம் + "||" + Nayanthara film at the World Film Festival

உலகப்பட விழாவில் நயன்தாரா படம்

உலகப்பட விழாவில் நயன்தாரா படம்
உலகப்பட விழாவில் நயன்தாரா படம்.
நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கூழாங்கல் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ளார். குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவை மையப்படுத்தி தயாராகி உள்ளது.

இந்த படம் தொடர்ந்து உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகிறது. நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது.


பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கூழாங்கல் திரையிடப்பட்டு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வாங்கியது. உக்ரைனில் ஆண்டு தோறும் நடைபெறும் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் கூழாங்கல் தேர்வானது.

இந்த நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் கூழாங்கல் படம் தற்போது தேர்வாகி இருக்கிறது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஓடிடி தளத்தில் ஜி.வி.பிரகாஷ் படம்
விஜய் பிரகாஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
2. மீண்டும் ஓடிடி-யில் தனுஷ் படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஓடிடி-யில் நேரடியாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகிருக்கிறது.
3. ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய நயன்தாரா படம்
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
4. நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக்..!
யூடியூப் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரித்விக் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
5. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரியா பவானி சங்கர் படம்
பல படங்களில் நடித்து பிரபலமாகி தற்போது கைவசம் பல படங்களை வைத்து இருக்கும் பிரியா பவானி சங்கரின் ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.