சினிமா செய்திகள்

போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் + "||" + Fake Twitter account: Actor Charlie complained to the Police Commissioner's Office

போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

போலி டுவிட்டர் கணக்கு : நடிகர் சார்லி  போலீசிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பது தொடர்பாக போலீசில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.
சென்னை

 நடிகர் சார்லியின் பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் "இந்த டுவிட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்ற பதிவு வெளியாகியிருந்தது. இதை வைத்து பலரும் சார்லியின் டுவிட்டர் கணக்கை பின்தொடர தொடங்கினார்கள்.

தற்போது இந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார் சார்லி. இது தொடர்காக போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் சார்லி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிவரும் நான் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி இன்று (ஜூன் 11) போலி டுவிட்டர் கணக்கு (https://twitter.com/ActorCharle) துவங்கி இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்"இவ்வாறு சார்லி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. போலி சாதி சான்றிதழ் விவகாரம்: நடிகை நவ்னீத் கவுருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்!
போலி சாதி சான்றிதழ்: அமராவதி தனித்தொகுதி எம்.பி நடிகை நவ்னீத் கவுருக்கு மும்பை நீதிமன்றம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
2. 5 ஜி தொழில்நுட்ப மனு : நடிகை ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு ரூ.20 லட்சம் அபராதம்
5ஜி தொழில்நுட்பம் தொடரபாக டெல்லி ஐகோர்ட்டில் நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ரூ.20 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
3. கமல்ஹாசன் படங்களை இயக்கிய டைரக்டர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்
கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, மகாராசன் படங்களை இயக்கிய ஜி.என் ரங்கராஜன் காலமானார்.
4. கே.ஜி.எப் நடிகர் யாஷ் கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி
கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக பிரபல நடிகர் யாஷ் வழங்கியுள்ளார்.
5. கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்: நடிகர் கைது
நடிகர் கரண் மெஹ்ராவுக்கும் அவர் மனைவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது