மம்முட்டி நடிக்கிறார் ‘சி.பி.ஐ. டைரி குறிப்பு 5-ம் பாகம்’


மம்முட்டி நடிக்கிறார் ‘சி.பி.ஐ. டைரி குறிப்பு 5-ம் பாகம்’
x
தினத்தந்தி 11 Jun 2021 4:22 PM GMT (Updated: 2021-06-11T21:52:37+05:30)

சி.பி.ஐ. டைரி குறிப்பு 5-ம் பாகத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடிக்கிறார்.

‘சி.பி.ஐ. டைரி குறிப்பு, ஒரு துப்பறியும் படம். முதன் முதலாக மலையாளத்தில் தயாராகி வெளிவந்த இந்த படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூலில் முந்திய சாதனைகளை முறியடித்தது.

அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகங்கள் வெளிவந்தன. நான்கு பாகங்களும் வெற்றி பெற்றன.4 பாகங்களிலும் மம்முட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், சேதுராம அய்யர். அவருடன் ஒரு முக்கிய வேடத்தில் ஆஷாசரத் நடிக் கிறார்.

5-ம் பாகம், ‘சி.பி. ஐ. டைரி குறிப்பு 5’ என்ற பெயரில் தயாராகிறது. கதாநாயகனாக மம்முட்டி நடிக்கிறார். அவருக்கு ஜோடி கிடையாது. ஒரு முக்கிய வேடத்தில் ஆஷாசரத் நடிக்கிறார். கே.மது டைரக்டு செய்கிறார்.

நகரில் ஒரு கொலை நடக்கிறது. அதில் மம்முட்டி துப்பறிவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

Next Story