கல்லூரி நாட்களில் உருவான `மாயா'


கல்லூரி நாட்களில் உருவான `மாயா
x
தினத்தந்தி 11 Jun 2021 4:41 PM GMT (Updated: 2021-06-11T22:11:54+05:30)

கல்லூரி நாட்களில் உருவான `மாயா' படத்தை பற்றி டைரக்டர் சசி கூறுகிறார்.

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ஒரு தமிழ் குறும் படத்துக்கு, சிகாகோ திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது. அந்த படத்தின் பெயர், ‘மாயா.’ சசி டைரக்டு செய்திருக்கிறார். விய் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. படத்தை பற்றி டைரக்டர் சசி கூறுகிறார்:

‘‘ஒரு திரைக்கதை எழுத்தாளர் தனது படைப்பின் கதையை நீண்ட காலமாக எப்படி திட்டமிடுகிறார்? அவரின் கனவு படைப்பை எப்படி தீர்மானிக்கிறார்? இறுதியில் அவர் என்ன கதையை முடிவு செய் கிறார்? அவரின் பார்வையாளர்கள் யார்? என்பதே ‘மாயா’ குறும் படத்தின் கதை.

என் கல்லூரி நாட்களில்தான் இந்த கதையை எழுதினேன். எனது முதல் திரைப்படத்தின் திரையிடலுக்கு பிறகே குறும் படத்தை வெளியிட விரும்பினேன். ஆனாலும் ‘மாயா’ படத்துக்கு விருது கிடைத் திருப்பதில் மகிழ்ச்சி.’’

Next Story