தொழில் அதிபர் ஆகிறார் சினிமாவை விட்டு விலக காஜல் அகர்வால் முடிவு?


தொழில் அதிபர் ஆகிறார் சினிமாவை விட்டு விலக காஜல் அகர்வால் முடிவு?
x
தினத்தந்தி 12 Jun 2021 12:57 AM GMT (Updated: 2021-06-12T06:27:02+05:30)

நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகி கணவர் கவுதம் கிச்சலுவின் தொழில் நிறுவனத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகி கணவர் கவுதம் கிச்சலுவின் தொழில் நிறுவனத்தை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கவுதம் கிச்சலு அமெரிக்காவில் படித்துவிட்டு மும்பையில் சொந்தமாக தொழில் நிறுவனத்தை தொடங்கி வீடு மற்றும் வணிக கட்டிடங்களில் பெரிய அளவில் உள்அலங்காரம் செய்யும் பணியை செய்து வருகிறார்.

தற்போது காஜல் அகர்வாலும் இந்த தொழிலை கற்று வருகிறார். ஓய்வு நேரங்களில் கம்பெனிக்கு சென்று கணவருக்கு உதவியாக இருந்தும் வேலைகளை பார்க்கிறார். முழுநேரமாக வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.

காஜல் அகர்வால் கைவசம் ஹேய் சினாமிகா, கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தியன்-2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இவற்றை முடித்து விட்டு சினிமாவை விட்டு விலக இருப்பதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, ‘‘எனது கணவர் சினிமாவில் இருந்து விலக சொன்னால் நடிப்பதை விட்டுவிடுவேன்'' என்று கூறியிருந்தார்.

Next Story