சினிமா செய்திகள்

தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி + "||" + Suicide actor Sushant Singh's life film case dismissed

தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி

தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி
தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த வருடம் ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் மன அழுத்தத்தில் அவர் உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையான ‘எம்.எஸ்.தோனி த அன்ட் டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் நடித்து பிரபலமானார். சுஷாந்த் சிங் வாழ்க்கையை “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் படமாக்கினர். இதில் சுஷாந்த் சிங் வேடத்தில் ஜூபர் கானும், காதலி ரியா சக்கரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லாவும் நடித்தனர். திலீப் குலாட்டி இயக்கினார்.


இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சுஷாந்த் சிங் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்துக்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரங்களில் தெளிவு இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; 14 பேர் மீது வழக்கு
கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; 14 பேர் மீது வழக்கு
2. அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்கு
இளையான்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக அ.தி.மு.க.வினர் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. டிரைவரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
இளையான்குடி அருகே டிரைவரை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
5. தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்கு
அரியலூரில் தனியார் விடுதியில் சூதாடிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.