சினிமா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட கார்த்தி + "||" + Karthi vaccinated against corona

கொரோனா தடுப்பூசி போட்ட கார்த்தி

கொரோனா தடுப்பூசி போட்ட கார்த்தி
ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.
ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். தடுப்பூசி போடும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

நீங்கள் போட்டீர்களா என்ற பதிவுகளை வெளியிட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தடுப்பூசி போட்டார்.


இந்த நிலையில் நடிகர் கார்த்தி தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போடும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கார்த்தி நடித்த சுல்தான் படம் ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது மித்ரன் இயக்கும் சர்தார், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் உயிரிழந்த தாய்: உடலை பார்க்க வர மறுத்த மகள்..!
கொரோனாவால் இறந்த தாயின் உடலை பார்க்க வர மகள் மறுத்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.
2. மேலும் 280 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. 141 பேருக்கு கொரோனா
141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 777 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 777 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர் ஒருவர் தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
5. தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை