தனுஷ் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை கார்த்திக் சுப்புராஜ் சொல்கிறார்


தனுஷ் படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை கார்த்திக் சுப்புராஜ் சொல்கிறார்
x
தினத்தந்தி 13 Jun 2021 4:38 AM GMT (Updated: 2021-06-13T10:08:50+05:30)

கடந்த ஏப்ரல் மாதம் வந்த ‘கர்ணன்’ ஆகிய படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. அடுத்து அவர் நடித்த ‘ஜெகமே தந்திரம்’ வெளிவருகிறது.

கடந்த சில வருடங்களாக தனுசுக்கு சுக்ரதிசை. அவர் நடித்து 2015-ல் வந்த ‘மாரி’, 2018-ல் வந்த ‘மாரி-2’, 2019-ல் வந்த ‘அசுரன்’, கடந்த ஏப்ரல் மாதம் வந்த ‘கர்ணன்’ ஆகிய படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. அடுத்து அவர் நடித்த ‘ஜெகமே தந்திரம்’ வெளிவருகிறது. கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்துள்ள இந்த படத்தில், தனுஷ் அடிதடிக்கு அஞ்சாத வீரராக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஐஸ்வர்யா லட்சுமி. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜேம்ஸ் காஸ்மோ, ‘பீட்டர்’ என்ற கதாபாத்திரத்திலும், ஜோஜு ஜார்ஜ், ‘சிவதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும் மிரட்டியிருப்பதாக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கூறினார். அவர் மேலும் கூறும்போது, ‘‘இது, லண்டனில் நடக்கும் கதை. கதாநாயகன் மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் நிகழ்வுகள்தான் திரைக்கதை. ஆட்சேபகரமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.’’ என்றார்.

Next Story