சினிமா செய்திகள்

ஆர்யாவின் புதிய படம் + "||" + Arya acting new film

ஆர்யாவின் புதிய படம்

ஆர்யாவின் புதிய படம்
ஆர்யா நடித்த டெடி படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி.யில் வந்தது.
தற்போது சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 3-ம் பாகம் மற்றும் எனிமி, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக வருகிறார். சார்பட்டா பரம்பரை பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி 
உள்ளது. அடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. தற்போது சாந்தகுமார் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே இயக்குனரின் மகாமுனி படத்தில் 
ஆர்யா ஏற்கனவே நடித்து இருக்கிறார். இந்த படம் பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. எனவே மீண்டும் சாந்தகுமார் இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் இதற்கான திரைக்கதையை தயார் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.