சினிமா செய்திகள்

உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி + "||" + Actress Sanuja retaliates against those who made fun of her weight

உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி

உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு நடிகை சனுஜா பதிலடி
தமிழில் பீமா, ரேனிகுண்டா, நாளை நமதே, கொடி வீரன், எத்தன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனுஜா.
அதிக மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் உடல் எடை கூடியது. அவரது தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் வலைத்தளத்தில் கேலி செய்து பதிவுகள் வெளியிட்டனர். தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சனுஜா ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் உடல் எடையை வைத்து தன்னை கேலி செய்தவர்களுக்கு சனுஜா பதிலடி கொடுத்து ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது உடல் எடை பற்றி கவலைப்படுபவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், ஒருவர் எடை குறைப்பதற்காகவும், அழகாக இருப்பதற்காகவும் மட்டுமே உயிர் வாழ்வது இல்லை. ஒருவரின் உடல் தோற்றத்தை வைத்து தைரியமாக கேலி செய்யும் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது ஒருவரை நோக்கி நீங்கள் விரல் காட்டும்போது மற்ற விரல்கள் உங்களை நோக்கி இருக்கிறது. ஆகவே நீங்களும் நேர்த்தியானவர் இல்லை. உங்கள் உடலை கவனித்துக்கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை