சினிமா செய்திகள்

வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன் + "||" + Sivakarthikeyan set up a vegetable garden at home

வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்

வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்த சிவகார்த்திகேயன்
நடிகர், நடிகைகள் வீட்டில் காலியாக உள்ள இடத்திலும், மொட்டை மாடியிலும் காய்கறி தோட்டங்கள் அமைத்து வருகின்றனர்.
தங்களுக்கு தேவையான காய்கறிகளை அந்த தோட்டத்தில் இருந்தே பறித்து பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து உள்ளார். அந்த தோட்டத்தை வீடியோவில் படம்பிடித்து ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசும்போது, “இதுதான் எனது காய்கறி தோட்டம். ஊரடங்குக்கு கொஞ்சம் முன்புதான் இந்த தோட்டத்தை தயார் செய்தேன். இப்போது இங்கிருந்துதான் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பறித்து பயன்படுத்துகிறேன் இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்றுதான் இந்த வீடியோ. இந்த தோட்டத்தை இன்னும் முழுமையாக தயார் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அதெல்லாம் தயாரானதும் திரும்பவும் உங்களுக்கு காட்டுகிறேன். எல்லோரும் பத்திரமாக இருங்கள். சீக்கிரம் நமது வாழ்க்கையும் இந்த காய்கறி தோட்டம் போன்று செழிப்பாகி விடும்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயன் உடன் நடிக்கும் சாய் பல்லவி!
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார்.
2. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படத்தின் டிரைலர் வெளியானது ..!
டான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது .
3. சிவகார்த்திகேயன் கொடுக்கும் பிரைவேட் பார்ட்டி
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தில் இடம்பெற்றுள்ள பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகிறது.
4. சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் புதிய திருப்பம்
சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.