சினிமா செய்திகள்

தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார் + "||" + Actress alleges rape, murder attempt by businessman; seeks justice from PM in Facebook post

தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார்

தொழிலதிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரபல நடிகை புகார்
வங்காள தேசத்தின் பிரபல நடிகை தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரதமர் பேஸ்புக் மூலம் புகார் கூறி உள்ளார்.
டாக்கா

வங்காள தேசத்தின் பிரபல நடிகை ஷம்சுன்னஹர் ஸ்மிருதி. போரி மோனி என்று பிரபலமாக அறியப்படும் அவர் அங்குள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டி பிரதமர் ஷேக் ஹசீனாவிடம்  பேஸ்புக் பதிவில்  நீதி கோரியுள்ளார்.

 2015 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமான  நடிகை இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வங்காள தேச திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஆண்டு ஆசியாவின் 100 டிஜிட்டல் நட்சத்திரங்களில் ஒருவராக அவரை தேர்ந்து எடுத்து இருந்தது.

டாக்காவில் உள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டி உள்ளார்.

பிரதமர் ஹசீனாவை "அம்மா" என்று அழைத்த நடிகை சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியை நாடியதாகவும் ஆனால் நீதி கிடைக்கத் தவறியதாகவும் கூறினார்.

மேலும் "நான் எங்கே நீதி தேடுவேன்?"  நான் ஒரு பெண், நான் ஒரு நடிகர், ஆனால் அதற்கு முன், நான் ஒரு மனிதன். என்னால் அமைதியாக இருக்க முடியாது என கூறி உள்ளார்.

உதவி ஐ.ஜி.பி சோஹல் ராணா, நடிகை  போலீசை தொடர்பு கொள்ளும்போது போலீஸ்  நடவடிக்கை எடுக்கும் என்று கூறி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை  பெயரைக் குறிப்பிடாமல் பேஸ்புக் பதிவில் குற்றச்சாட்டுகளை வைத்த பின்னர், நிருபர்களை சந்தித்த அவர் டாக்கா படகு கிளப்பின் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார  செயலாளர் நசீர் யு மஹ்மூத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக  குற்றம் சாட்டினார்,

டாக்கா படகு கிளப்பின் நிறுவன உறுப்பினரான நசீர் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
2. "பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் மது விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
4. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
5. இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்