தேசிய விருது பெற்ற நடிகர் விபத்தில் பலி


தேசிய விருது பெற்ற நடிகர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 15 Jun 2021 1:17 AM GMT (Updated: 2021-06-15T06:47:55+05:30)

தேசிய விருது பெற்ற பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் விபத்தில் பலியானார்.

பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் 2015-ல் வெளியான நானு அவனல்ல அவளு என்ற படத்தில் திருநங்கையாக நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். தசவல, ஒகரனே, சிப்பாயி. ரிக்தா அல்லாமா, வர்த்தமானா, கிருஷ்ண துளசி, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு 37 வயது ஆகிறது.

சஞ்சாரி விஜய் தனது நண்பர் நவீன் என்பருடன் பெங்களூரு ஜே.பி.நகர் அருகில் பைக்கில் சென்றார். பைக்கை நவீன் ஓட்டினார். மழை பெய்து சாலை சகதியாக இருந்ததால் பைக் சறுக்கி அருகில் நின்ற மின்கம்பத்தில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சஞ்சாரி விஜய், நவீன் ஆகிய இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சஞ்சாரி விஜய்க்கு தலை மற்றும் காலில் காயங்கள் இருந்தன. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கோமா நிலையில் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Next Story