சினிமா செய்திகள்

அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பில் மாற்றம் + "||" + A change in Ajith Kumar's strength shooting

அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பில் மாற்றம்

அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பில் மாற்றம்
அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பில் மாற்றம் செய்ய படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு ஏற்கனவே கொரோனா முதல் அலையால் பாதித்தது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தினர். வில்லன்களுடன் அஜித் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சியை படமாக்கியபோது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் வலியை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பினார்.

அடுத்து இறுதிகட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராக உள்ளனர். சில சண்டை காட்சிகளை சுவிட்சர்லாந்தில் தொழில் நுட்ப நிபுணர்களை வைத்து படமாக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே எடுத்த ஒரு சில காட்சிகளில் லேசான மாற்றம் செய்து மீண்டும் படமாக்கவும் விரும்பினார்.

இந்த காட்சிகளை படமாக்கியதும் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். ஆனால் கொரோனாவால் சுவிட்சர்லாந்து பயணம் தடைபட்டு உள்ளது. மறுபடப்பிடிப்புக்கான காட்சிகளை எடுக்கவும் கொரோனா விதிமுறைகளால் அனுமதி கிடைக்கவில்லை. எனவே வெளிநாட்டில் எடுக்க வேண்டிய காட்சிகளை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.